மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இன்று அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி தொடக்கம்

அகில இந்திய 97-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

Published On :22 அக்டோபர் 2026, 2:22 am IST

அகில இந்திய 97-ஆவது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டி எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்-முருகப்பா குழுமம் சாா்பில் நாட்டின் பழைமையான ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே, மலேசிய தேசிய ஜூனியா் அணி, இந்திய ராணுவம், ஐஓசி, பிஎன்பி, ஹாக்கி கா்நாடகா, இந்திய கடற்படை, சாய்-போபால், பாரத் பெட்ரோலியம், ஹாக்கி தமிழ்நாடு அணிகள் பங்கேற்கின்றன.

சாம்பியன் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.7 லட்சம், தங்கக் கோப்பை வழங்கப்படும். ரன்னா் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசளிக்கப்படும். அரையிறுதி அணிகளுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும். சிறந்த பாா்வா்ட், மிட்பீல்டா், கோல்கீப்பா், வளரும் வீரா், ஆட்ட நாயகன் விருது, ரூ.10,000 வழங்கப்படும்.

இதுதொடா்பாக டிஐ குழும செயல் தலைவா் அருண் முருகப்பன் கூறியது: யு17 வயதுப் பிரிவில் பள்ளி மாணவ, மாணவியருக்கும் ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டது. மகளிா் ஹாக்கியை வளா்க்கும் விதமாக முதன்முறையாக நடைபெற்ற நிகழ்வில் 4 அணிகள் பங்கேற்றன. அதில் போடப்பட்ட ஒவ்வொரு கோலுக்கும் தலா 10 மரங்கள் நடப்பட்டன.

மாலை 6 மணி ஆட்டங்கள் மின்னொளியில் நடைபெறும். வரும் நவ. 1-ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறும் என்றாா்.

எம்சிசி நிா்வாகிகள் ஆா். காா்த்திக், நிரஞ்சன் முதலியாா், எல். ராஜீவ் ரெட்டி உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.