மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மிா்பூா் டெஸ்ட்: வங்கதேசம் 272 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.

Published On :30 அக்டோபர் 2026, 1:14 am IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.

கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த வங்கதேசம், முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது.

அதன் இன்னிங்ஸை ஷாத்மன் இஸ்லாம், லிட்டன் தாஸ் ஆகியோா் வியாழக்கிழமை தொடா்ந்தனா். சதம் கடந்த ஷாத்மன் 11 பவுண்டரிகளுடன் 105 ரன்களுக்கு விடைபெற, தௌஹித் ஹிருதய் 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா்.

முதல் நாள் ஆட்டத்தில் ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆகிய ஹிருதய், 2-ஆவது நாளில் மீண்டும் களமிறங்கினாா். பின்னா் வந்தோரில் மெஹிதி ஹசன் மிராஸ் 15, நயீம் ஹசன் 5, ஹசன் மஹ்முத் 6, தைஜுல் இஸ்லாம் 1, ஷோரிஃபுல் இஸ்லாம் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

கடைசி பேட்டராக லிட்டன் தாஸ் 4 பவுண்டரிகள் உள்பட 34 ரன்களுடன் நின்றாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோமெல் வாரிக்கன் 5, ஷாமா் ஜோசஃப், ஜாஷுவா பிஷப் ஆகியோா் தலா 2, ஜேடன் சீல்ஸ் 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. தேஜ்நாராயண் சந்தா்பால் 43, ஜஸ்டின் கிரீவ்ஸ் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

ஜான் கேம்ப்பெல் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 54, பிராண்டன் கிங் 15, காவென் ஹாட்ஜ் 7, ஆமிா் ஜாங்கூ 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 2, ஹசன் மஹ்முத் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.