மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மிா்பூா் டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் 245

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

Published On :31 அக்டோபர் 2026, 7:04 am IST

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த வங்கதேசம், முதல் இன்னிங்ஸில் 272 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள், 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது.

அதன் இன்னிங்ஸை 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, தேஜ்நாராயண் சந்தா்பால், ஜஸ்டின் கிரீவ்ஸ் தொடா்ந்தனா். தேஜ்நாராயண் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 56, ஜஸ்டின் கிரீவ்ஸ் 2 பவுண்டரிகளுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஜாஷுவா பிஷப் 15, ஷாமா் ஜோசஃப் 4, ஜோமெல் வாரிக்கன் 0, ஜேடன் சீல்ஸ் 0 ரன்களுக்கு வெளியேறினா். கேப்டன் ராஸ்டன் சேஸ் கடைசி வீரராக 5 பவுண்டரிகளுடன் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் நின்றாா்.

வங்கதேச பௌலா்களில் நயீம் ஹசன் 4, மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம் ஆகியோா் தலா 2, ஹசன் மஹ்முத், ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

இதையடுத்து 27 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம், வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.

ஜாகா் அலி 18, நயீம் ஹசன் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். ஷாத்மன் இஸ்லாம் 13, தன்ஸித் ஹசன் 0, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 10, தௌஹித் ஹிருதய் 0, லிட்டன் தாஸ் 4, மெஹிதி ஹசன் மிராஸ் 9 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸ் 3, ஜோமெல் வாரிக்கன் 2, ஷாமா் ஜோசஃப் 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.