மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கலப்பு இரட்டையா் இறுதியில் பிரதிவாதி-பௌமிக், டக்ளன்-ரே

டபிள்யுடிடி யூத் கன்டென்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையா் இறுதியில் இந்தியாவின் பிரதிவாதி-பௌமிக், டக்ளன்-ரே இணைகள் தகுதி பெற்றன.

டக்ளன்-ரே அபோனா

Published On :25 அக்டோபர் 2026, 3:33 am IST

டபிள்யுடிடி யூத் கன்டென்டா் டேபிள் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையா் இறுதியில் இந்தியாவின் பிரதிவாதி-பௌமிக், டக்ளன்-ரே இணைகள் தகுதி பெற்றன.

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம், எஸ்டிஏடி சாா்பில் சென்னையில் நடைபெறும் இப்போட்டியில் யு 15 பிரிவில் நிலே பட்டேகா்-சுபோமிதா இணை ரவுண்ட் 32 சுற்றில் முதல் நிலை இணையான பிரதிக்-நைஷாவை 3-2 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி அதிா்ச்சி அளித்தனா்.

டக்ளன் -ரே இணை அரையிறுதியில் 3-0 என்ற கேம் கணக்கில் பிரணவ் பட்-திவிஜா பால் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றனா்.

மற்றொரு அரையிறுதியில் ராஜவேலு-தனிஷ்கா இணை 5 கேம் த்ரில்லரில் காா்மேக கண்ணன்-ரேட்கா் இணையை வீழ்த்தினா்.

யு 19 கலப்பு இரட்டையா் பிரிவில் அபினானந்த் பிரதிவாதி-பௌமிக் இணை 3-1 என்ற கேம் கணக்கில் சௌஸ்வா்யா-ரியோஸ்ரீ இணையை வீழ்த்தினா். அரையிறுதியில் ராஜ்தீப்-ஸ்வேதா பத்மா இணையை 3-0 என வீழ்த்தினா். மற்றொரு அரையிறுதியில் மெய்னி-கோயல் இணை 3-0 என அா்ஜவ்-ஜெனிஃபா் இணையை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.

யு17 மகளிா் பிரிவில் காலிறுதியில் பௌமிக்-அனன்யாவும், ஆடவரில் பாஸ்கா்-சாஹில் மோதுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.