இந்தியாவுக்கு 24ஆவது தங்கம்..! தடகளத்தில் இரண்டு பதக்கம் வென்ற இந்தியர்கள்!

ஆசிய பாரா விளையாட்டில் இந்தியாவுக்கு 24ஆவது தங்கம் பெற்றுத்தந்த வீரர்கள் குறித்து...

Sandeep & Ajay Kumar clinched Gold and Bronze

தங்கம், வெண்கலம் வென்ற இந்தியர்கள் - படங்கள்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்

Published On :23 அக்டோபர் 2026, 12:19 pm IST

ஆசிய பாரா விளையாட்டில் 400 மீட்டர் ஆடவருக்கான தடகளத்தில் இந்திய வீரர் சந்தீப் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இது இந்தியாவின் 24ஆவது தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

டி64 பிரிவில் 400 மீட்டர் ஆடவருக்கான தடகளத்தில் இந்திய வீரர்கள் தங்கமும் வெண்கலமும் வென்றுள்ளார்கள். இதில் சந்தீப் இலக்கை 52.28 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

சௌதி அரேபியாவின் நூர் அல்சானா 53.13 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றுமொரு இந்தியரான அஜய் குமார் 53.61 விநாடிகளில் இலக்கைக் கடந்து ஆசிய சாதனையுடன் (டி64 பிரிவில்) வெண்கலம் வென்றார்.

சந்தீப் மற்றும் அல்சானா டி44 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அஜய் குமார் டி46 பிரிவைச் சேர்ந்தவர்கள். டி44 மற்றும் டி64 இருவர்களுக்கும் ஒரே பிரிவில் போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் இந்திய அணியினர் அதிகமான வெள்ளிப் பதக்கங்களையும் தங்கப் பதக்கங்களையும் வென்று வருகிறார்கள்.

Summary

Sandeep & Ajay Kumar clinched Gold and Bronze respectively in the Men’s 400m T64 event

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.