தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இன்றைய நாளில் முதல் தங்கம்..! வில்வித்தையில் அசத்திய இந்தியர்கள்!

ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள் குறித்து...

Harvinder Singh & Vijay Sundi

ஹரிவிந்தர் சிங், விஜய் சுந்தி - படம்: எக்ஸ் / தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்

Published On :23 அக்டோபர் 2026, 12:00 pm IST

ஆசிய பாரா விளையாட்டில் ரிகர்வ் வில்வித்தையில் இந்தியாவின் ஹரிவிந்தர் சிங், விஜய் சுந்தி இணைந்து தங்கம் வென்றுள்ளார்கள். இன்றைய நாளில் (அக்.23) முதல் தங்கம் இதன் மூலம் கிடைத்துள்ளது.

ஜப்பானின் அயிச்சி நகோயாவில் ஆசிய பாரா போட்டிகள் கடந்த அக்.18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாகத் தொடங்கின. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆடவருக்கான இரட்டையர் ரிகர்வ் வில்வித்தையில் இந்தியாவின் ஹரிவிந்தர் சிங், விஜய் சுந்தி சீனாவின் யூன் டியோ அண்ட் ஜாவோ லீஸுக்கே உடன் இறுதிப்போட்டியில் மோதினார்கள்.

இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் 5-1 என்ற கணக்கில் சீன வீரர்களை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்கள். இதன் மூலம் இந்தியாவுக்கு 22ஆவது தங்கம் கிடைத்துள்ளது.

தமிழக வீரர் நவீன் சிவக்குமார் இதனைத் தொடர்ந்து பாட்மின்டனில் தங்கம் வென்று அசத்தினார். இத்துடன் இந்தியாவுக்கு 23 தங்கம், 29 வெள்ளி, 41 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இன்றைய நாளின் முதல் பதக்கமாக தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளி வென்றார். முதல் தங்கமாக ஹரிவிந்தர் சிங், விஜய் சுந்தி இணைந்து வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Harvinder Singh & Vijay Sundi strike GOLD in the Para Recurve Men’s Doubles event

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.