மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி 2 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தேர்வாகியுள்ளது. லிவர்பூல் அணிக்கு எதிரான 3-2 என்ற வெற்றியுடன் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மைக்கேல் கேரிக் தலைமையில் மான்செஸ்டர் யுனைடெட் கடந்த 14 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தலா தோல்வி, சமனில் முடிவடைந்துள்ளது. மற்ற அனைத்திலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி கம்பேக் அளித்து வருகிறது. 35 போட்டிகளில் 64 புள்ளிகள் பெற்று மூன்றாமிடம் வகிக்கிறது.
கடந்த 2 சீசன்களாக (2023/24, 2024/25) சாம்பியன்ஸ் லீக்கில் தேர்வாகாமல் இருந்த மான்செஸ்டர் யுனைடெட் தற்போது 2026/27 சீசனில் விளையாட தேர்வாகியுள்ளது.
பிரீமியர் லீக்கில் அதிக கோப்பைகள் வென்ற மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கில் 3 கோப்பைகள் மட்டுமே வென்றுள்ளது. இந்த அணியின் கம்பேக்கினால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அடுத்த பிரீமியர் லீக் போட்டியில் சுந்தர்லேண்டு அணியுடன் வரும் சனிக்கிழமை விளையாடவிருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளில் நொட்டிங்ஹம் பாரஸ்ட், பிரைடன் ஆகிய அணிகளுடன் மே 17, மே24ஆம் தேதி மோதுகின்றன.
Summary
Manchester United set to play in the 2026/2027 Champions League after two years
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

21 ஆண்டுகளுக்குப் பிறகு கடம்பநாத சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மான்செஸ்டர் சிட்டி வெற்றியால் தள்ளிப்போகும் ஆர்செனலின் கோப்பைக் கனவு!

சாம்பியன்ஸ் லீக்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆர்செனல்!

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

