காசிக்கு நிகரான காஞ்சிபுரம் அடுத்த கடம்பர் கோயில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆவுடை நாயகி சமேத கடம்பநாதர் சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மட்டுமல்ல, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமப்புற கோயில்களும் மிகவும் புகழ்பெற்றவையாக அமைந்துள்ளது. அவ்வகையில் காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரி அடுத்த கடம்பர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ கடம்பநாதர் திருக்கோயில்.
காசிக்கு நிகரான புகழ்பெற்ற இத்திருக்கோயில் கடந்த 2005 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் 21 வருடங்களுக்குப் பிறகு கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதன் நிறைவாக இன்று காலை 6 மணி அளவில் மகா பூர்ணஹதி நடைபெற்று ராஜகோபுரம் மூலவர் அம்மன் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் காணக் கலச புறப்பாடு துவங்கி மேளதாளங்கள் மற்றும் கைலாய வாத்தியங்கள் முழங்கத் திருக்கோயிலை வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு சிறப்புப் பூஜைகள் மேற்கொண்டு புனித நீர் ஊற்றிய போது நமச்சிவாய நமச்சிவாய எனப் பக்தர்கள் கோஷமிட மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
மகா கும்பாபிஷேக விழாவில் முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டார். மகா கும்பாபிஷேக விழாவில் ஏற்பாடுகளைக் கோயில் பரம்பரை அறங்காவலர் புத்தளி ராஜசேகர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
The Maha Kumbabishekam of the Kadambanathar Swamy Temple was conducted in a grand manner after 21 years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீபால் முனீஸ்வரா், ஸ்ரீகாளியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

மாங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவானைக்காவல் ராஜமன்னாா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

கருப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

