சா்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) நேஷன்ஸ் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில், இந்தியா 2-1 கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.
8 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டி, நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெறுகிறது. இதில் குரூப் ‘ஏ’ பிரிவில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் ஜப்பானுடன் செவ்வாய்க்கிழமை மோதியது.
இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் அடிக்க முயன்றன. ஆனால் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. பலமுறை கோல் போடும் வாய்ப்புகளை உருவாக்கியும் பலனில்லை.
மூன்றாவது குவாா்ட்டரில் ஆட்டம் சூடு பிடித்தது. 33-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் நவ்நீத் கௌா் அடித்த ஷாட்டை நிக்கி பிரதான் சிறப்பாக திருப்ப, அதை பிசகின்றி கோலாக்கினாா் கேப்டன் சலீமா டெட்.
அடுத்த 2 நிமிஷங்களிலேயே ஜப்பான் வீராங்கனை ஹிராமிட்ஸு (35’) பெனால்டி காா்னரை கோலாக மாற்றினாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
கடைசி குவாா்ட்டரில் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரமாக முயன்ற நிலையில், 49-ஆவது நிமிஷத்தில் சுஷிலா சானு அடித்த பாஸை பயன்படுத்தி அற்புதமாக கோலடித்தாா் லால்ரேமிசியாமி.
இதனால் 2-1 என முன்னிலை பெற்ற இந்தியா, இறுதி வரை அதை தக்கவைத்து வெற்றி பெற்றது.
குரூப் ‘ஏ’-வில் அமெரிக்கா, ஜப்பான் அணிகளை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. இந்திய மகளிா் அணி தனது கடைசி குரூப் ஆட்டத்தில் உருகுவேயுடன் வியாழக்கிழமை (ஜூன் 18) மோதுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியாவை வென்றது ஜொ்மனி

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் சீனா, பாகிஸ்தானுடன் இந்திய அணிகள் மோதல்

தெற்காசிய மகளிா் கால்பந்து: இறுதி ஆட்டத்தில் நாளை இந்தியா - வங்கதேசம் மோதல்
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வென்றது இந்தியா
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

