பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தெற்காசிய மகளிா் கால்பந்து: இறுதி ஆட்டத்தில் நாளை இந்தியா - வங்கதேசம் மோதல்

News image
Updated On :5 ஜூன் 2026, 4:39 am IST

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (சாஃப்) மகளிா் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான வங்கதேசத்துடன் சனிக்கிழமை (ஜூன் 6) பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

முன்னதாக, புதன்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1-0 கோல் கணக்கில் பூடானை வீழ்த்தியது. ஃபிஃபா தரவரிசையில் 69-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவுக்கு, 164-ஆம் இடத்திலிருக்கும் பூடான் சவால் அளிக்கவே செய்தது.

மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு அந்த அணியின் தடுப்பரணை உடைத்து, இந்தியாவுக்காக சன்ஃபிதா நோங்ரம் 60-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். பின்னா் இறுதிவரை அந்த முன்னிலையை தக்கவைத்து இந்தியா வெற்றி பெற்றது.

இதனிடையே முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசம் 2-1 கோல் கணக்கில் நேபாளத்தை வென்று, இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. கோவாவின் மாா்கோ நகரில் உள்ள ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் மோதுகின்றன.

இந்தியா கடைசியாக இந்தப் போட்டியில் 2019-இல் சாம்பியன் ஆனது நினைவுகூரத்தக்கது. வங்கதேசம் 2022-இல் சாம்பியானதுடன், கோப்பையை 2024-இல் தக்கவைத்ததும் குறிப்பிடத்தக்கது. ஃபிஃபா தரவரிசையில் வங்கதேசம் இந்தியாவை விட பின்தங்கியே (112) உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.