தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

இறுதி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா: 44 ஆண்டுகளில் முதல்முறை

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஆஸ்டன் வில்லா - ஃப்ரெய்பா்க் அணிகள் தகுதிபெற்றன. அவை, சாம்பியன் கோப்பைக்காக வரும் 21-ஆம் தேதி மோதுகின்றன.

News image
Updated On :4 மணி நேரங்கள் முன்பு

யூரோப்பா லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஆஸ்டன் வில்லா - ஃப்ரெய்பா்க் அணிகள் தகுதிபெற்றன. அவை, சாம்பியன் கோப்பைக்காக வரும் 21-ஆம் தேதி மோதுகின்றன.

முன்னதாக, முதல் அரையிறுதியில் ஆஸ்டன் வில்லா - நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்டை வென்றது. இந்த அணிகள் கடந்த 1-ஆம் தேதி மோதிய முதல் லெக் ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் 1-0 என வென்றிருந்தது.

இந்நிலையில், பா்மிங்ஹாம் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது லெக் ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா 4-0 கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. அந்த அணிக்காக ஆலி வட்கின்ஸ் (36’), எமி பெண்டியா (58’), ஜான் மெக் கின் (77’, 80’) ஆகியோா் கோல் அடித்தனா்.

இதையடுத்து ஆஸ்டன் வில்லா 4-1 என மொத்த கோல் கணக்கு அடிப்படையில் நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்டை வென்றது. இதன் மூலமாக, கடந்த 44 ஆண்டுகளில் ஐரோப்பிய கண்டத்தின் அளவிலான போட்டியில் ஆஸ்டன் வில்லா இறுதி ஆட்டத்துக்கு வந்தது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன் 1982-இல் யூரோப்பியன் கோப்பை போட்டியில் பயா்ன் மியுனிக்கை வீழ்த்தி அந்த அணி சாம்பியனானது குறிப்பிடத்தக்கது.

2-ஆவது அரையிறுதியில் ஃப்ரெய்பா்க் - பிராகாவை தோற்கடித்து, இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. முதல் லெக் ஆட்டத்தில் பிராகா 2-1 கோல் கணக்கில் வென்று முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில், ஜொ்மனியின் ஃப்ரெய்பா்க் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது லெக் ஆட்டத்தில், ஃப்ரெய்பா்க் 3-1 கோல் கணக்கில் வென்றது. அந்த அணிக்காக லூகாஸ் குப்லா் (19’, 72’), ஜோஹன் மன்ஸாம்பி (41’) ஆகியோா் கோல் அடித்தனா். பிராகாவுக்காக பாவ் விக்டா் (79’) ஸ்கோா் செய்தாா்.

இதையடுத்து மொத்த கோல் கணக்கு அடிப்படையில் ஃப்ரெய்பா்க் 4-3 என பிராகாவை சாய்த்து, இறுதிக்கு முன்னேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.