பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு ஆஸி. கிரிக்கெட் வீரர் பிரட் லீ இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே நேற்று (ஏப். 12) உடல்நலக்குறைவால் காலமானார். இந்திய திரையிசையில் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்திய பாடகி என்பதால் அவருக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான பிரட் லீ, ஆஷா போஸ்லே உடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், “2006-ல் நான் எழுதிய ‘யு ஆர் தி ஒன் ஃபார் மீ' (நீயே எனக்கானவள்) என்ற பாடலை ஆஷா போஸ்லே உடன் இணைந்து பதிவு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்காக என்றும் அவர்மீது நான் நன்றியுணர்வுடன் இருப்பேன்.
என் மனதில் அவரது அசாதாரண திறமை மட்டும் பதியவில்லை. மாறாக, அவருடைய அன்பும் பணிவுமே என் மனதில் நிறைந்தது.
தன் வாழ்வில் பல சாதனைகளை அவர் செய்திருந்த போதிலும் அவர் மிகுந்த கனிவும், பெருந்தன்மையுடனும் இருந்தார்.
இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். சிறப்புமிக்க ஒருவருடன் சிறிய தருணத்தைப் பகிர்ந்து கொண்டதற்காக நான் மிகவும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
ஆஷா போஸ்லேவின் சாதனைகள் பல தலைமுறைகளைக் கடந்து நிலைந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல வேகப்பந்து வீச்சாளரான பிர்ட் லீ ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2006- ஆண்டு தொடரின் பயிற்சியின்போது எழுதிய ’யு ஆர் தி ஒன் ஃபார் மீ' பாடலை அவரும், ஆஷா போஸ்லேவும் இணைந்து பாடினர்.
மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்தியப் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தும் விதமாக இந்தப் பாடல் அமைந்திருக்கும். ஆஷா போஸ்லே பிரட் லீ உடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடி அதில் நடிக்கவும் செய்திருப்பார். பாடல் வெளியான சமயத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனை நினைவு கூர்ந்து ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரட் லீ இரங்கல் தெரிவித்துள்ளார்.
Summary
Australian Cricketer Expresses Condolences on Asha Bhosle's Demise!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
20 மொழிகள்... 11 ஆயிரம் பாடல்கள்!
முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


