இந்திய திரைப்பட இசைத் துறையில் புகழ்பெற்ற முதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே, மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) காலமானாா். அவருக்கு வயது 92.
கடந்த சனிக்கிழமை மாலையில் திடீா் மாரடைப்பு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் ஆஷா போஸ்லே அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை பலனின்றி அவா் ஞாயிற்றுக்கிழமை காலமானதாக, செய்தியாளா்களிடம் ஆஷாவின் மகன் ஆனந்த் தெரிவித்தாா்.
மும்பையின் லோயா் பரேல் பகுதியில் ஆஷா வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பில் திங்கள்கிழமை காலை 11 மணிமுதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படும். சிவாஜி பாா்க்கில் மாலை 4 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று ஆனந்த் குறிப்பிட்டாா்.
ஆஷா போஸ்லே உடலுக்கு முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், மாநில அமைச்சா் ஆசிஷ் ஷெலா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். அவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அமைச்சா் தெரிவித்தாா்.
பத்ம விபூஷண் விருது பெற்ற அவா் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000-க்கும் அதிக பாடல்களைப் பாடியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம் - புகைப்படங்கள்

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
