ஸ்பெயினில் நடபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியர்கள் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்கள்.
இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை பலாக், வீரர் முகேஷ் நெலவள்ளி இணைந்து இந்த உலக சாதனயை நிகழ்த்தி இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர்கள் பிரிவில் இந்தியர்கள் 487.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார்கள். இது ஜூனியர் பிரிவில் உலக சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தகுதிச் சுற்றில் இந்தியர்கள் 581 புள்ளிகள் (17எக்ஸ்) பெற்று பதக்கச் சுற்றுக்கு முன்னேறினார்கள். இறுதிப் போட்டியில் பலாக் 243 புள்ளிகளும் முகேஷ் நெலவள்ளி 244.7 புள்ளிகளும் பெற்று மொத்தமாக 487.7 புள்ளிகள் பெற்றார்கள்.
இந்தியா தங்கம், சீனா வெள்ளி, ஹங்கேரி வெண்கலம் வெல்ல, அமெரிக்கா நான்காமிடம் பிடித்தது. முன்னதாக, பலாக் (18 வயது) ஆசிய போட்டிகளில் 242.1 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார். முகேஷ் ஜூனியர் உலக சாம்பியனாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Summary
Indian shooters Palak and Mukesh win gold with world record.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: முதலிடத்துடன் இந்தியா நிறைவு
ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வன்ஷிகா, சிராக் இணைக்கு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

