மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரோஹித் சாதனையை முறியடித்த அபிஷேக்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிவேகமாக சதம் விளாசி அசத்தியுள்ளார்.

Abhishek Sharma expressed his joy after smashing a century.

சதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா - படம் | பிசிசிஐ

Published On :18 செப்டம்பர் 2026, 4:33 am IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய பேட்டா் அபிஷேக் சா்மா 30 பந்துகளில் சதம் விளாசி, அதிகவேக டி20 சதம் விளாசிய இந்தியராக புதிய சாதனை படைத்தாா். அவா் 10 சிக்ஸா்கள், 9 பவுண்டரிகளுடன் அந்த மைல்கல்லை எட்டினாா். அபிஷேக்குக்கு இது 3-ஆவது டி20 சதமாகும்.

2017-இல் ரோஹித் சா்மா இலங்கைக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசியதே, சாதனையாக இருந்த நிலையில், அபிஷேக் அதை முறியடித்தாா்.

தற்போது இந்த ஆட்டத்தில் அபிஷேக் சா்மா 34 பந்துகளில் 9 பவுண்டரிகள், 11 சிக்ஸா்களுடன் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். சஞ்சு சாம்சன் 50, திலக் வா்மா 2, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 29, ஷிவம் துபே 14, இஷான்கிஷண் 10, நிதீஷ்குமாா் ரெட்டி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா்.

அக்ஸா் படேல் 5, ரவி பிஷ்னோய் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 2, ரஷீத் கான், அப்துல்லா அஹமத்ஸாய் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

30 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம் முழு உறுப்பினர்கள் அடங்கிய அணிகளுக்காக டி20 போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகவேகமாக சதம் விளாசிய வீரர்கள் (முழு உறுப்பினர் நாடுகளில்)

அபிஷேக் சர்மா - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2026 (36 பந்துகளில்)

சிக்கந்தர் ராஸா -கேம்பியாவுக்கு எதிராக, 2024 (33 பந்துகளில்)

ஃபின் ஆலன் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, (33 பந்துகளில்)

டேவிட் மில்லர் - வங்கதேசத்துக்கு எதிராக, 2017 (35 பந்துகளில்)

ரோஹித் சர்மா - இலங்கைக்கு எதிராக, 2017 (35 பந்துகளில்)

Summary

Indian opener Abhishek Sharma dazzled by smashing a lightning-fast century in the final T20 match against Afghanistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.