தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அபிஷேக் சர்மாவின் உலகத் தரத்திலான ஆட்டத்தை யாரும் மறக்க மாட்டார்கள்: டேரில் மிட்செல்

அபிஷேக் சர்மாவின் உலகத் தரத்திலான ஆட்டத்தை யாரும் மறக்க மாட்டார்கள் என நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

Abhishek Sharma

அபிஷேக் சர்மா - படம் | பிசிசிஐ

Published On :27 அக்டோபர் 2026, 8:23 pm IST

அபிஷேக் சர்மாவின் உலகத் தரத்திலான ஆட்டத்தை யாரும் மறக்க மாட்டார்கள் என நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 38 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவை பாராட்டியதுடன், மீதமுள்ள இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என நம்புவதாக டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அபிஷேக் சர்மாவின் இன்னிங்ஸ் மிகவும் சிறப்பானது என நினைக்கிறேன். அவரது சில ஷாட்டுகள் உலகத் தரத்தில் இருந்தன. அதன் காரணமாகவே அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக உள்ளார். இன்றையப் போட்டியில் அவர் மிக நன்றாக விளையாடினார். அவரது இந்த இன்னிங்ஸை யாரும் மறக்க மாட்டார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

இந்தியாவுக்கு எதிரான இந்த டி20 தொடரை இழந்துவிட்டோம். ஆனால், எங்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. அந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நியூசிலாந்து அணிக்காக விளையாடுவது எப்போதும் மிகவும் சிறப்பானது. இந்தியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டிக்கான சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டி வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

Summary

New Zealand all-rounder Daryl has stated that no one will forget Abhishek Sharma's world-class performance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.