தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

35 பந்துகளில் சதமடித்த அபிஷேக் சர்மா..! டி20 தொடரை வென்றது இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி குறித்து...

Abhishek Sharma

அபிஷேக் சர்மா - படம்: ஐசிசி

Published On :27 அக்டோபர் 2026, 3:46 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என இரண்டு போட்டிகள் மீதமிருக்கையில் இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.

வெல்லிங்டனில் தொடங்கிய மூன்றாவது டி20யில் இந்தியா டாஸ் வென்று பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 198/3 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 89 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப், அக்‌ஷர் படேல், நிதீஷ் குமார் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199/4 ரன்கள் எடுத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்தப் போட்டியில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அசத்தினார். இது அவருக்கு 4ஆவது டி20 சர்வதேச சதம், மொத்தமாக 11ஆவது டி20 சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைபவ் சூர்ய்வன்ஷி 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நியூசிலாந்து சார்பில் கைல் ஜேமிசன் 2, சான்ட்னர், பிஷ்ஷர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

மொத்தமாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என தொடரை வென்றுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் அக்.30, நவ.1.ஆம் தேதி நடைபெற இருக்கின்றன.

Summary

Abhishek Sharma scores a century off 35 balls! T20 series won by Team India!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.