மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மார்னஸ் லபுஷேன் டக் அவுட்..! ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய சிமோன் ஹார்மெர்!

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் குறித்து...

Australia's Marnus Labuschagne, right, plays a shot as South Africa's Ryan Rickelton watches on during day two of the third cricket test match between South Africa and Australia, in Cape Town, South Africa, Wednesday, Oct. 28, 2026. (AP Photo/Halden Krog)

மார்னஸ் லபுஷேன் ஆட்டமிழப்பு - AP

Published On :28 அக்டோபர் 2026, 4:25 pm IST

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் மதிய உணவு வரை நடைபெற்றுள்ளது. இதில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்று ஆஸி. பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 82.3 ஓவர்களில் 329 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கஸ் அக்கர்மேன் 95 ரன்கள் குவித்தார்.

ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இரண்டாம் நாள் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது.

சிமோன் ஹார்மெர் வீசிய ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தன. டிராவிஸ் ஹெட் போல்ட் ஆனார். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுஷேன் கடைசி பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார்.

டிராவிஸ் ஹெட் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மார்னஸ் லபுஷேன் டக் அவுட் ஆனார். இந்தத் தொடரில் முதல் டெஸ்ட்டில் (37+37) 74 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட்டில் (14+39) 53 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த நிலையில், தொடரைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் ரன் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். இவரை அணியிலிருந்து நீக்க வேண்டுமென பலமுறை சூழ்நிலைகள் உருவாகின.

பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் இந்தத் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Marnus Labuschagne out for a duck again..! Simon Harmer takes 2 wickets in a single over!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.