மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தோனி - யுவராஜ் சிங் போன்று திலக் வர்மா - நிதீஷ்குமார் ரெட்டி; சுரேஷ் ரெய்னா ஒப்பீடு!

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங்கின் பேட்டிங்குடன் திலக் வர்மா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டியின் பேட்டிங்கை சுரேஷ் ரெய்னா ஒப்பிட்டுள்ளார்.

படம் | பிசிசிஐ

Published On :26 அக்டோபர் 2026, 9:34 pm IST

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங்கின் பேட்டிங்குடன் திலக் வர்மா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டியின் பேட்டிங்கை சுரேஷ் ரெய்னா ஒப்பிட்டுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று முன் தினம் (அக்டோபர் 24) கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின், திலக் வர்மா, நமன் திர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங்கின் பேட்டிங்குடன் திலக் வர்மா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டியின் பேட்டிங்கை சுரேஷ் ரெய்னா ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி தற்போது மிகவும் நன்றாக செயல்பட்டு வருகிறது. உதாரணமாக திலக் வர்மாவை எடுத்துக் கொள்ளலாம். யுவராஜ் சிங், மகேந்திர சிங் தோனி மற்றும் நான் 5,6,7 மற்றும் 8-வது இடங்களில் விளையாடும்போது, அணிக்காக போட்டியை வென்று கொடுக்க வேண்டும் என்ற அதீத ஆர்வத்துடன் விளையாடுவோம். திலக் வர்மாவிடம் அந்த பண்பு இருப்பதை உணர முடிந்தது. அவர் மிகவும் நன்றாக செயல்பட்டார். அவர் பந்துவீச்சிலும் இந்திய அணிக்காக அவரது பங்களிப்பை தொடர்ந்து சிறப்பாக வழங்கி வருகிறார்.

நிதீஷ் குமார் ரெட்டியும் மிகவும் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் மிகவும் நேர்மறையான எண்ணத்துடன் விளையாடினார். இவர்களது பார்ட்னர்ஷிப் யுவராஜ் சிங் - தோனியின் பார்ட்னர்ஷிப்பை நினைவுப்படுத்தியது. புவனேஷ்வர் குமார் யாதவும் நன்றாக பந்துவீசினார். ஷ்ரேயாஸ் ஐயர் அணியை நன்றாக வழிநடத்துகிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Summary

Suresh Raina has compared the batting of Tilak Varma and Nitish Kumar Reddy to that of former Indian team players Mahendra Singh Dhoni and Yuvraj Singh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.