மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்: மைக்கேல் பிரேஸ்வெல்

இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்விடைந்தது குறித்து அந்த அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பேசியுள்ளார்.

படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :26 அக்டோபர் 2026, 4:49 pm IST

இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்விடைந்தது குறித்து அந்த அணி வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் பேசியுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், டெத் ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதாக நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் எங்களை அழுத்ததில் வைத்திருந்தாக நினைக்கிறேன். முதல் இரண்டு போட்டிகளுமே அதிக இலக்கை நோக்கி விளையாடப்பட்ட போட்டிகள். இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி எங்களைவிட சற்று வித்தியாசமாக செயல்பட்டு வெற்றி பெற்றார்கள்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தருகிறார்கள். பவர்பிளேவில் அவர்கள் அதிக ரன்கள் குவிக்கிறார்கள். மிடில் ஓவர்களில் நாங்கள் ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும். முதல் இரண்டு போட்டிகளிலிருந்து நிறைய நேர்மறையான விஷயங்கள் கிடைத்துள்ளன. மூன்றாவது டி20 போட்டிக்காக காத்திருக்கிறோம் என்றார்.

Summary

New Zealand player Michael Bracewell has spoken about his team's consecutive defeats against India on home soil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.