மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நியூசி.க்கு எதிரான மூன்றாவது பயிற்சி ஆட்டத்துக்கான இந்திய அணியில் பும்ரா, ரிஷப் பந்த்!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது பயிற்சி ஆட்டத்துக்கான இந்தியா ஏ அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Jasprit Bumrah - Rishabh Pant.

ஜஸ்பிரித் பும்ரா - ரிஷப் பந்த். - படம் |AP

Published On :26 அக்டோபர் 2026, 7:28 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது பயிற்சி ஆட்டத்துக்கான இந்தியா ஏ அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகள் தங்களுக்குள் அதிகாரபூர்வமற்ற 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டிக்கான இந்தியா ஏ அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயத்திலிருந்து மீண்டு வரும் இருவரும் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-ன் திறன் மேம்பாட்டு மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளதால், அதற்கு தயாராகும் விதமாக மூன்றாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் அவர்கள் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக குமார் குஷாக்ரா செயல்படும் நிலையில், மூன்றாவது போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ இடையேயான மூன்றாவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 7 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

Summary

Jasprit Bumrah and Rishabh Pant have been included in the India A squad for the third warm-up match against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.