தெ.ஆ. வேகப் பந்துவீச்சாளர் விலகல்..! தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி குறித்து...

South African team

தென்னாப்பிரிக்க அணி - படம்: எக்ஸ் / புரோட்டியாஸ் மென்

Published On :25 அக்டோபர் 2026, 3:34 pm IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப் பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜே காயம் காரணமாக விலகியுள்ளார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் 1-1 என தொடர் சமநிலையில் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் வரும் அக்.27ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

இந்த மூன்றாவது போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிக்ஸில் இடுப்புப் பகுதி காயத்தினால் ஆன்ரிச் நார்ட்ஜே இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), மார்க்வெஸ் அக்கர்மேன், டேவிட் பெடிங்ஹாம், கார்பின் போஷ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஜெரால்ட் கோட்ஸி, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, ககிசோ ரபாடா, ரியான் ரபாடா.

முக்கியமான போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்குமா என்பது அக்.27ஆம் தேதிதான் தெரியவரும். அவருக்குப் பதிலாக யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியுற்ற ஆஸ்திரேலிய அதற்காக பழிவாங்க காத்திருக்கிறது. அந்த அணியிலும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Summary

Fast bowler Anrich Nortje has been ruled out of the Test due to a mild groin injury, team announcement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.