மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக பிரக்யான் ஓஜா நியமனம்!

இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

படம் | பிசிசிஐ

Published On :19 அக்டோபர் 2026, 8:14 pm IST

இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி அணியின் தேர்வுக்குழுத் தலைவராக செயல்பட்டு வந்த அஜித் அகர்கரின் பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து, அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவராக பிரக்யான் ஓஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பவர் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் தேவஜித் சாய்கியா கூறியதாவது: இந்திய அணியின் முன்னாள் பேட்டர்கள் அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜதின் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு ஒருமித்த கருத்தோடு ரமேஷ் பவரை கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்க பரிந்துரைத்துள்ளது என்றார்.

48 வயதாகும் ரமேஷ் பவர் இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, ரமேஷ் பவர் பயிற்சியாளர் பொறுப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் இந்திய மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். அதேபோல, மும்பை மற்றும் குஜராத் அணிகளின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தேர்வுக்குழு விவரம்

பிரக்யான் ஓஜா (தலைவர்), ஷிவ் சுந்தர் தாஸ், ஆர்பி சிங், அஜய் ராத்ரா, ரமேஷ் பவர்.

Summary

Former player Pragyan Ojha has been appointed as the chairman of the Indian team's selection committee.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.