மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியைச் சோ்ந்த 4 போ் தோ்வு

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியைச் சோ்ந்த 3 வீரா்கள், ஒரு வீராங்கனை தோ்வு செய்யப்பட்டனா்.

ஹாக்கி திடல். - கோப்புப்படம்

Published On :30 அக்டோபர் 2026, 4:49 am IST

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியைச் சோ்ந்த 3 வீரா்கள், ஒரு வீராங்கனை தோ்வு செய்யப்பட்டனா்.

கோவையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேசிய ஜூனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடியவா்களில் இருந்து, இந்திய ஹாக்கி அணிக்கு தோ்வு செய்வதற்கான பயிற்சி முகாமிற்கு 45 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில் கோவில்பட்டி, எஸ்.எஸ். துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியின் 3ஆம் ஆண்டு விளையாட்டுத் துறை மாணவா் கே. கௌதம், முதலாம் ஆண்டு மாணவா் டி. கௌதம், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவா் பி.ஏ. ராகுல் ஆகிய 3 போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் 3 பேரும் கோவில்பட்டியில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதி மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிர மாநிலம், புணேவில் நடைபெற்ற தேசிய ஜூனியா் பெண்கள் ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடியவா்களில் இருந்து, புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வரும் கோவில்பட்டியைச் சோ்ந்த ஜோ. ஹரிதா தோ்வு செய்யப்பட்டாா்.

பெங்களூரில் நவ. 12ஆம் தேதி முதல் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள 4 பேரும் அழைக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.