மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றியுடன் கேப்டன் பயணத்தைத் தொடங்கிய ஸ்மிருதி மந்தனா!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றது.

படம் | பிசிசிஐ

Published On :16 அக்டோபர் 2026, 10:34 pm IST

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றது.

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான முதல் டி20 போட்டி ராய்பூரில் இன்று (அக்டோபர் 16) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஜிம்பாப்வே முதலில் விளையாடியது.

முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷேர்ன் மேயர்ஸ் 33 பந்துகளில் 43* ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கெலிஸ் 42 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இந்தியா தரப்பில் நந்தனி சர்மா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிராந்தி கௌட், அருந்ததி ரெட்டி மற்றும் ஸ்ரீ சரணி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

வெற்றியுடன் தொடங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா!

115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். கேப்டன் ஸ்மிருதி மந்தனா 9 ரன்கள், ஷஃபாலி வர்மா 4 ரன்கள், அனுஷ்கா சர்மா 4 ரன்கள் மற்றும் ஹர்மன்பிரீத் கௌர் ஒரு ரன் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அறிமுக வீராங்கனை நிகி பிரசாத் 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

ஜிம்பாப்வே தரப்பில் நியாஷா குவான்ஷுரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிச்செல் மவுங்கா, ஆலிண்டர் மற்றும் பிலௌட் பிஸா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்மிருதி மந்தனாவுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

In the first T20 match against Zimbabwe, the Indian team won by 4 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.