தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்திய அணி வீரர்கள் - படம் | AP

Published On :16 அக்டோபர் 2026, 9:41 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி வருகிற அக்டோபர் 22 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (அக்டோபர் 16) அறிவித்துள்ளது.

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் அணியை ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்துகிறார். கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்படவுள்ளார். டெஸ்ட் தொடருக்கான அணியை ஷுப்மன் கில் கேப்டனாக வழிநடத்துகிறார்.

முதல் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், நிதீஷ் குமார் ரெட்டி, அக்‌ஷர் படேல், நமன் திர், அன்ஷுல் கம்போஜ், குர்னுர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம்

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா,இஷான் கிஷன், நிதீஷ் குமார் ரெட்டி, அக்‌ஷர் படேல், நமன் திர், ஆகிப் நபி, குர்னுர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா, முகமது சிராஜ், யஷ் தாக்குர், குல்தீப் யாதவ்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம்

ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், சாய் சுதர்சன், நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.