மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அழுத்தமான சூழலில் பந்துவீச்சாளர்கள் யோசித்து செயல்பட வேண்டும்: மோர்னே மோர்க்கல்

அழுத்தமான சூழலில் பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

morne morkel

மோர்னே மோர்க்கல்

Published On :16 அக்டோபர் 2026, 9:09 pm IST

அழுத்தமான சூழலில் பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. தற்போது இரண்டு அணிகளும் டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையே நான்கு போட்டிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (அக்டோபர் 17) நடைபெறுகிறது.

இந்த நிலையில், அழுத்தமான சூழலில் பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும் என இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இரண்டு போட்டிகளுக்கு நடுவே அதிகம் பயிற்சியில் ஈடுபடுவதற்கான நேரம் இருக்காது. முந்தைய போட்டிகளில் நடந்தவற்றை யோசிக்காமல் அதிலிருந்து நகர்ந்து செல்ல வேண்டும். நாங்கள் வீரர்களுடன் அமர்ந்து சிறிது ஆலோசனையில் ஈடுபட்டோம். பந்துவீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சு திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அழுத்தமான சூழலில் புத்திசாலித்தனமாக யோசித்துப் பந்துவீச வேண்டும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் எங்களது பந்துவீச்சு குழுவுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது. பிரின்ஸ் யாதவ் அவரது பந்துவீச்சு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துகிறார். அவருடைய பலம் என்ன என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றார்.

Summary

Indian team bowling coach Morne Morkel has stated that bowlers need to make intelligent decisions in high-pressure situations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.