கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

திரைக் கதிர்

அமிதாப்பச்சன் தனது 84-ஆவது பிறந்தநாளையொட்டி அளித்த பேட்டியில், 'திரைப்பயணத்தில் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களைக் கடந்துவிட்ட நிலையிலும், ஒரு திரைப்படத்தை இயக்கும் விஷயத்தைப் பற்றி நான் ஒருபோதும் தீவிரமாகப் பரிசீலித்ததில்லை.

Published On :25 அக்டோபர் 2026, 4:09 am IST

அமிதாப்பச்சன் தனது 84-ஆவது பிறந்தநாளையொட்டி அளித்த பேட்டியில், 'திரைப்பயணத்தில் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களைக் கடந்துவிட்ட நிலையிலும், ஒரு திரைப்படத்தை இயக்கும் விஷயத்தைப் பற்றி நான் ஒருபோதும் தீவிரமாகப் பரிசீலித்ததில்லை.

கேமராவுக்குப் பின்னால் நின்று படத்தை இயக்கும் அளவுக்கு திரைப்படத் தயாரிப்பு நுட்பங்களை ஆழமாக நான் புரிந்துகொள்ளவில்லை. என்னைப் பொருத்தவரை, மற்ற படைப்பாளிகள் எனக்கு முன்வைக்கும் சவால்களைச் சிறப்பாக எதிர்கொள்வதே தனது பணி'' எனத் தெரிவித்துள்ளார்.

Story image

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானதைத் தொடர்ந்து நடிகை தனுஸ்ரீ தத்தா சிறப்பு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், '2020-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத்தை ஒருவர் மட்டும் சித்ரவதை செய்யவில்லை. பாலிவுட்டில் ஒரு கும்பலே சித்ரவதை செய்தது.

ஒவ்வொருவரும் தங்கள் செயல்களுக்கு இறுதியில் பதிலளிக்க வேண்டும். தனியாக வென்ற நபர் ஆதரவு இல்லாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை; கடவுள் எப்போதும் அவர்களுடன் இருக்கிறார். சரியான நேரத்தில் நீதி கிடைக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Story image

தேவா உடலுக்கு இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தேவா இசையில் தான் 'வாலி', 'குஷி' என என்னுடைய வாழ்க்கையே தொடங்கியது. மிக அற்புதமான மனிதர். நல்ல மனிதர். யார் மனமும் கோணாமல் நடந்து கொண்டவர்.

அவர் இன்னும் 10 வருடங்கள் இருந்திருக்கலாம். அவருடன் பணியாற்றிய என்னுடைய அனுபவம் மிகச் சிறப்பானது. பார்த்தால் தூங்கியபடி இருக்கிறார். மிகவும் கஷ்டமாக உள்ளது. அவர் மறைந்தாலும், அவர் இசையமைத்த பாடல்கள் என்றென்றும் நம்முடன் இருக்கும்'' எனத் தெரிவித்துள்ளார்.

Story image

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகி ரிலீஸூக்குத் தயாராகி வருகிறது 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 20-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அளித்த பேட்டியில், 'கடந்த ஆகஸ்ட் மாதமே தனுஷ் சார் என்னிடம் பட ரிலீஸ் பற்றிய இந்த விஷயத்தைச் சொன்னார். ரஜினி சாரின் திரைப்படமும் அதே காலகட்டத்தில் வெளியாவதால், அவருக்குக் கொடுக்கும் மரியாதையின் நிமித்தமாக நமது படத்தின் ரிலீûஸத் தள்ளிவைக்கலாம் என்று கூறினார்'' என்று தெரிவித்துள்ளார்.

Story image

தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடிக்கும் 'தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தென்காசியில் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை ஜெயச்சந்திரனும், படத்தொகுப்புப் பணிகளை வி. ஜே. சபு ஜோசப்பும் மேற்கொள்கின்றனர்.

Story image

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் விறுவிறுப்பான திரைமொழிக்குப் பெயர் பெற்ற இயக்குநர் பூரி ஜெகன்நாத், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதுவரை வெளியிடப்பட்ட கதாபாத்திர அறிமுகக் காணொலிகள், படத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.