பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திரைக் கதிர் - 01-11-2026

ஏ.ஐ.யைப் பயன்படுத்தித் தன்னை ஆபாசமாகவும் தவறாகவும் சித்திரித்துத் தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகை சுனைனா தெரிவித்திருக்கிறார்.

Published On :1 நவம்பர் 2026, 12:34 pm IST

ஏ.ஐ.யைப் பயன்படுத்தித் தன்னை ஆபாசமாகவும் தவறாகவும் சித்திரித்துத் தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகை சுனைனா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், 'சமூக வலைதளங்கள், இணையதளங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எனது முகத்தை ஆபாசமான விடியோவில் மார்ஃபிங் செய்து பரப்பி வருகின்றனர்.

இந்த விடியோவுக்கும் எனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. மிகவும் அருவருக்கத்தக்க, வன்மமான இந்தச் செயலைக் கண்டு நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். இதை நான் மிகக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன். இந்த விடியோவை உருவாக்கவோ, பதிவிடவோ அல்லது பகிரவோ நான் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

Story image

அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா ஆகியோர், 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். இருவரும் தங்களது காதல், திருமணம் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்தனர். அதில் தனது மனைவி ராஷ்மிகா மந்தனாவைத் திருமணம் செய்துகொள்ள நூறு முறை கேட்க வேண்டும் என்று விஜய் தேவரகொண்டா கூறிய கருத்து பேசுபொருளானது. சமூக வலைதளங்களில் விஜய் தேவரகொண்டாவின் கருத்தில் ஆணாதிக்க மனநிலையை வெளிப்படுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.

இந்த விவகாரம் குறித்து ராஷ்மிகா மந்தனா அளித்த விளக்கத்தில், 'எங்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது காதலைக் காட்டுவதற்காக மண்டியிட்டு மோதிரம் அணிவிக்கும் வெறும் சடங்கு மட்டுமல்ல. அவையெல்லாம் வெளிப்புற அலங்காரங்கள் மட்டுமே. ஒன்றாக இணைந்து ஓர் அழகான வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதுதான் உண்மையான திருமணம்' எனத் தெரிவித்துள்ளார்.

Story image

சென்னையில் நடைபெற்ற செய்தி வாசிப்பாளர் சங்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றபோது, நெகட்டிவ் கமென்ட்ஸ் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், 'சமூக ஊடகங்களில் எதிர்மறையான விமர்சனங்களைப் பார்ப்பதோ, படிப்பதோ இல்லை. என் சமூக ஊடகப் பணிகளை என் குழுவினர் பார்க்கின்றனர்' என்றார்.

தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம், 'எந்த படத்தை ரீமேக் செய்து நடித்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?' என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், 'பொதுவாகவே எனக்கு மற்ற நடிகர்களின் படங்களை ரீமேக் செய்து நடிப்பதில் விருப்பமில்லை. ஒரு வேளை எந்த படத்தை ரீமேக் செய்து நடித்தால் எனக்கு செட் ஆகும் என்று யோசித்தால், ரஜினி சாரின் 'அண்ணாமலை' படத்தை ரீமேக் செய்து நடிக்க விரும்புகிறேன்' என்று பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.