டிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஆஸி. அணி அறிவிப்பு; மூத்த வீரர்களுக்கு ஓய்வு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

pat cummins

பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்)

Published On :2 நவம்பர் 2026, 5:22 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற நவம்பர் 13 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

இந்த இரண்டு தொடர்களிலும் மூத்த வீரர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்காக மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு தொடர்களிலுமே ஆஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷ் கேப்டனாக வழிநடத்துகிறார்.

ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்டுமேன், அலெக்ஸ் கேரி, கூப்பர் கானலி, ஜாக் எட்வர்ட்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், ஸ்பென்சர் ஜான்சன், ஆலிவர் பீக், மேத்யூ ரென்ஷா, லியம் ஸ்காட், ஆடம் ஸாம்பா.

டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்டுமேன், நிகில் சௌதரி, டிம் டேவிட், ஜோயல் டேவிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், நாதன் எல்லிஸ், ஜாக் ஃபிரேஸர் மெக்கர்க், சாம் ஹார்ப்பர், ஸ்பென்சர் ஜான்சன், மிட்செல் ஓவன், லாச்லான் ஷா, ஆடம் ஸாம்பா.

Summary

Cricket Australia has announced the Australian squad for the ODI and T20 series against England today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.