மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை தொடங்கிய ஷுப்மன் கில்!

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தொடங்கியுள்ளார்.

shubman gill

ஷுப்மன் கில் - படம் | பிசிசிஐ

Published On :29 அக்டோபர் 2026, 9:34 pm IST

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தொடங்கியுள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

டி20 தொடர் நிறைவடைந்த பிறகு இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், நியூசிலாந்து சென்றடைந்த இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஒருநாள் தொடருக்கான பயிற்சியை தொடங்கியுள்ளார்.

நான்காவது டி20 போட்டி நடைபெறும் ஈடன் பார்க் திடலில்தான் முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இன்று இந்திய அணியுடன் இணைந்த கேப்டன் ஷுப்மன் கில் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரின்போது, சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பல சாதனைகளை படைக்க வாய்ப்பிருக்கிறது. இதுவரை இந்திய அணிக்காக 149 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 7625 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 8000 ரன்கள் என்ற சாதனையை நோக்கி அவர் நகர்ந்து வருகிறார்.

இதுவரை இந்திய அணிக்காக 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் 3713 ரன்கள் எடுத்துள்ளார். இந்தத் தொடரின்போது, அவர் ஒருநாள் போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்து சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Indian team captain Shubman Gill has begun training for the ODI series against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.