மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐசிசி ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் 53 இடங்கள் முன்னேறிய வைஷ்ணவி சர்மா!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா 53 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார்.

Vaishnavi Sharma

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் வைஷ்ணவி சர்மா - படம் | ஐசிசி

Published On :3 நவம்பர் 2026, 6:34 pm IST

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா 53 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளார்.

இந்திய அணி அதன் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அண்மையில் விளையாடியது. இந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் இளம் வீராங்கனை வைஷ்ணவி சர்மா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வைஷ்ணவி சர்மா, கடைசி ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வைஷ்ணவி சர்மா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 53 இடங்கள் முன்னேறி 94-வது இடம் பிடித்துள்ளார். சயாலி சத்கரே 28 இடங்கள் முன்னேறி 85-வது இடமும், கிராந்தி கௌட் ஒரு இடம் முன்னேறி 24-வது இடமும் பிடித்தனர்.

பேட்டர்களைப் பொருத்தவரையில், தொடக்க வீராங்கனை பிரதீகா ராவல் மூன்று இடங்கள் முன்னேறி 28-வது இடம் பிடித்துள்ளார். ஷஃபாலி வர்மா எட்டு இடங்கள் முன்னேறி 65-வது இடம் பிடித்துள்ளார்.

Summary

Reports have emerged suggesting that Indian all-rounder Hardik Pandya is set to join the Punjab Kings team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.