மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் ஹர்மன்பிரீத் கௌர் முன்னேற்றம்!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் முன்னேற்றம் கண்டுள்ளார்.

Harmanpreet Kaur

ஹர்மன்பிரீத் கௌர் - படம் | ஐசிசி

Published On :27 அக்டோபர் 2026, 4:48 pm IST

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் முன்னேற்றம் கண்டுள்ளார்.

இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நாளை (அக்டோபர் 28) மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹர்மன்பிரீத் கௌர் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டர்களுக்கான தரவரிசையில் ஹர்மன்பிரீத் கௌர் இரண்டு இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் புதிய கேப்டனான ஸ்மிருதி மந்தனா தரவரிசையில் முதலிடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கு சறுக்கியுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா பேட்டிங் தரவரிசையில் நான்கு இடங்கள் முன்னேறி 23-வது இடம் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா 8-வது இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீராங்கனைகளில் ஒருவரான பிரதீகா ராவல் பேட்டிங் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 21-வது இடம் பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்பிரீத் கௌர் சதம் விளாசி அசத்தினார். அவர் 121 பந்துகளில் 126 ரன்கள் எடுத்தார்.

ஆசிய விளையாட்டில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், அவர் அண்மையில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian team captain Harmanpreet Kaur has moved up in the ICC ODI batting rankings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.