ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்று (மார்ச் 28) தொடங்கியது. சின்னசாமி திடலில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஹைதராபாத் அணி முதலில் விளையாடியது.
ஆர்சிபிக்கு 202 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இவர்களது விக்கெட்டுகளை ஐபிஎல் தொடரில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜேக்கப் டஃபி ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார். அபிஷேக் சர்மா 7 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதீஷ் குமார் ரெட்டியின் விக்கெட்டினையும் ஜேக்கப் டஃபி வீழ்த்தி அசத்தினார். நிதீஷ் குமார் ரெட்டி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, கேப்டன் இஷான் கிஷன் மற்றும் கிளாசன் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் விளாசி அசத்தினார்.
கிளாசன் 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ரன்கள் (8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய அனிகேத் வர்மா 18 பந்துகளில் 43 ரன்கள் (3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
பெங்களூரு தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜேக்கப் டஃபி மற்றும் ரோமாரியோ ஷெப்பர்டு தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங் மற்றும் சூயாஷ் சர்மா தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பின்னர், 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணியில் பிலிப் சால்ட் 8 ரன்களில் ஏமாற்றமளிக்க, விராட் கோலியும் தேவ்தத் படிக்கலும் சேர்ந்து சிக்ஸர் - பவுண்டரிகளை பறக்கவிட்டனர்.
அதிரடியாக விளையாடிய படிக்கல், 26 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்கள் எடுத்து ஹார்ஷ் துபே பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த கேப்டன் ரஜத் படிதார் 12 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 31 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப மறுமுனையில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய விராட் கோலி 38 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசி 69 ரன்களும், டிம் டேவிட் 16 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
பெங்களூரு அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்து இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணித் தரப்பில் பெய்ன் 2 விக்கெட்டுகளும், ஹார்ஷ் துபே, உனட்கட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.
Summary
Devdutt Padikkal's 26-ball-61 crusted with class and Virat Kohli's masterly unbeaten half-century powered Royal Challengers Bengaluru to a dominant six-wicket victory over Sunrisers Hyderabad in the IPL 2026's season-opening match here on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!
ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!

கிளாசன் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 227 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கிய விராட் கோலி; புதிய சாதனைகள் படைப்பாரா?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
