ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தொடங்கியுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்காக விராட் கோலி தன்னுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களிலும் தொடர்ச்சியாக 600-க்கும் அதிகமாக ரன்கள் குவித்துள்ளார். இந்த சீசனிலும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளைப் படைக்க காத்திருக்கிறார்.
கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது விராட் கோலிக்கு மிகப் பெரிய மனநிறைவைத் தந்திருக்கும். கோப்பைக்கான தேடல் முடிவுக்கு வந்துவிட்டதால், எதிர்வரும் ஐபிஎல் சீசனில் விராட் கோலி மிகவும் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் 8661 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 9000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைக்கவுள்ளார்.
மேலும், இதுவரை 414 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 13,543 ரன்கள் குவித்துள்ளார். அதில் 9 சதங்கள் மற்றும் 105 அரைசதங்கள் அடங்கும். டி20 போட்டிகளில் 14,000 ரன்கள் குவித்துள்ள கிறிஸ் கெயில் (14,562),கிரன் பொல்லார்டு (14,482), அலெக்ஸ் ஹேல்ஸ் (14,449), டேவிட் வார்னர் (14,028) வரிசையில் விராட் கோலியும் இணைந்து சாதனை படைக்க காத்திருக்கிறார்.
Summary
Royal Challengers Bangalore player Virat Kohli has started training for the upcoming IPL season.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்; மிகப் பெரிய சாதனையை நோக்கி விராட் கோலி!
ஆரஞ்ச் கேப் வென்ற விராட் கோலி..! புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகும் சிறப்பாக விளையாடியது எப்படி? விராட் கோலி பதில்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


