கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 226 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் விளையாடியது.
கிளாசன் அரைசதம்; கொல்கத்தாவுக்கு 227 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா அணிக்கு அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 82 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் இஷான் கிஷன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், கிளாசன் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
அதிரடியாக விளையாடிய கிளாசன் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். நிதீஷ் குமார் ரெட்டி 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கும்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் பிளெஸ்ஸிங் முசராபானி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி மற்றும் அனுகுல் ராய் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in the match against the Kolkata Knight Riders, Sunrisers Hyderabad scored 226 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிராவிஸ் ஹெட் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 166 ரன்கள் இலக்கு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்; வெற்றி தொடருமா?

338% சம்பள உயர்வு..! கிளாசனின் வாழ்க்கையை மாற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஐபிஎல் தொடரில் ஹென்ரிச் கிளாசன் புதிய சாதனை!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


