மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

டிராவிஸ் ஹெட் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 166 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :3 மே 2026, 5:20 pm IST

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

டிராவிஸ் ஹெட் அரைசதம் விளாசல்; கொல்கத்தாவுக்கு 166 ரன்கள் இலக்கு!

டாஸ் வென்று முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 28 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, இஷான் கிஷன் 29 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

அபிஷேக் சர்மா 15 ரன்கள், ஹென்ரிச் கிளாசன் 11 ரன்கள், பாட் கம்மின்ஸ் 10 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சுனில் நரைன் மற்றும் கார்த்திக் தியாகி தலா இரண்டு விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா, கேமரூன் கிரீன் மற்றும் அனுகுல் ராய் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்குகிறது.

Summary

In the IPL match against the Kolkata Knight Riders, Sunrisers Hyderabad, batting first, were all out for 165 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.