தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சித்தேஸ்வர் புஜாரா பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்று (ஏப்ரல் 1) நடைபெற்ற போட்டிட்யில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் தில்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தில்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலை முதல் பந்திலேயே முகமது ஷமி ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பின், தில்லி கேபிடல்ஸ் அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி அபாரமாக பந்துவீசியதாகவும், அவரது எழுச்சியில் இது வெறும் ஆரம்பம் மட்டுமே எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த ஐபிஎல் சீசன் முகமது ஷமிக்கு மிகவும் முக்கியமானது. ஐபிஎல் தொடரை அவர் மிகவும் சிறப்பாக தொடங்கியுள்ளார். அவர் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றியிருக்கலாம். ஆனால், பவர்பிளேவில் லக்னௌ அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்க முக்கியப் பங்கு வகித்தார். ஆட்டத்தின் முதல் பந்திலேயே மிக முக்கியமான கே.எல்.ராகுலின் விக்கெட்டினை ஷமி வீழ்த்தினார். கே.எல்.ராகுல் உள்ளிருந்து வெளியாக நகர்ந்து விளையாடக் கூடியவர் என்பதையறிந்து ஷமி மிகவும் அகலமாக பந்தை வீசி, அவரது விக்கெட்டினை வீழ்த்தினார் என்றார்.
நீண்ட காலமாக இந்திய அணியில் இடம்பெறாமலிருக்கும், முகமது ஷமி உள்ளூர் போட்டிகளில் மிகவும் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாதிடமிருந்து முகமது ஷமியை டிரேடிங் மூலம் ரூ. 10 கோடிக்கு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
Summary
A former Indian player has praised Mohammed Shami for his excellent bowling in the match against the Delhi Capitals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

சிஎஸ்கேவுக்கு கவலையளிக்கும் விஷயம் இது மட்டும்தான்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்படுமா?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


