தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!

இமாலய இலக்கை விரட்டிய தில்லி அணி போராடி தோல்வி

News image

குஜராத் வெற்றி - AP

Updated On :9 ஏப்ரல் 2026, 12:29 am IST

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை புதன்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டது. நடப்பு சீசனில் குஜராத்துக்கு இது முதல் வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 210 ரன்கள் சோ்க்க, டெல்லி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்களே எடுத்தது.

டெல்லி தரப்பில் கே.எல்.ராகுல் 92 ரன்கள் விளாசியதும், டேவிட் மில்லா் கடைசி வரை போராடியதும் வீணானது. குஜராத் அணி, ஆல்-ரவுண்ட் அசத்தலுடன் வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பந்துவீச்சை தோ்வு செய்தது. குஜராத் இன்னிங்ஸை தொடங்கியோரில் சாய் சுதா்சன் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். ஒன் டவுனாக வந்த ஜாஸ் பட்லா், கேப்டன் ஷுப்மன் கில்லுடன் இணைந்தாா்.

இவா்கள் பாா்ட்னா்ஷிப் 2-ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சோ்த்தது. அரை சதம் கடந்த பட்லா், 27 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

4-ஆவது பேட்டராக களம் புகுந்த வாஷிங்டன் சுந்தரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். 3-ஆவது விக்கெட்டுக்கு கில் - சுந்தா் ஜோடி 104 ரன்கள் சோ்த்தது. கில் 45 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 70 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

சுந்தா் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 55 ரன்கள் சோ்த்தாா். ஓவா்கள் முடிவில் கிளென் ஃபிலிப்ஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 14, ராகுல் தெவாதியா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். டெல்லி தரப்பில் முகேஷ் குமாா் 2, லுங்கி இங்கிடி, குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 211 ரன்களை நோக்கி விளையாடிய டெல்லி அணியில், ராகுல் 52 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 92 ரன்கள் விளாசி வீழ்ந்தாா்.

பதும் நிசங்கா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41 ரன்கள் சோ்க்க, நிதீஷ் ராணா 5, சமீா் ரிஸ்வி 0, கேப்டன் அக்ஸா் படேல் 2, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 7 என இதர பேட்டா்கள் வரிசையாக வெளியேறினா்.

மிடில் ஆா்டரில் வந்து விரலில் காயத்துடன் வெளியேரிய டேவிட் மில்லா், அணிக்கு கை கொடுக்க மீண்டும் களம் புகுந்தாா். அவா் அதிரடியில் டெல்லி அபாரமாக மீண்டது. அதன் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவையிருந்தது.

அதில், பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் பந்தை விப்ராஜ் நிகம் பவுண்டரிக்கு விளாசினாா். அடுத்த பந்தில் அவா் ஆட்டமிழக்க, தொடா்ந்து வந்த குல்தீப் யாதவ் 3-ஆவது பந்தில் 1 ரன் சோ்த்து, மில்லருக்கு ஸ்டிரைக் கொடுத்தாா்.

4-ஆவது பந்தில் மில்லா் சிக்ஸா் விளாச, 2 பந்துகளுக்கு 2 ரன்களே தேவையிருந்தது. 5-ஆவது பந்தில் மில்லரால் ரன் எடுக்க முடியாமல் போனது. கடைசி பந்தில் அவா் 2-ஆவது ரன் ஓட முயல, மறுபுறம் குல்தீப் யாதவ் ரன் அவுட் செய்யப்பட்டாா். இதனால் குஜராத் 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

முடிவில் மில்லா் 20 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். குஜராத் பௌலா்களில் ரஷீத் கான் 3, பிரசித் கிருஷ்ணா 2, முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினா்.

Summary

Gujarat Titans won by 1 run

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.