ஐபிஎல் 2026 சீசனுக்கான இரண்டாம் கட்ட போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று (மார்ச் 26) வெளியிட்டுள்ளது.
இந்தப் போட்டிகள் ஏப்.13 முதல் தொடங்கி மே 24ஆம் தேதி வரை 12 இடங்களில் நடைபெற இருக்கின்றன. முதல் கட்டமாக மார்ச்.28 முதல் ஏப்.12ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் உலக அளவில் மிகவும் பிரபலமான உள்ளூர் டி20 போட்டியாக இருக்கின்றன. இந்தத் தொடரில் விளையாட பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
2026 சீசனுக்கான போட்டிகள் மார்ச் 28ல் தொடங்கி மே 24ஆம் தேதி வரை லீக் சுற்றுக்கான போட்டிகள் நடைபெற இருக்கின்றன. தேர்தல் இருப்பதால் முதல்கட்ட போட்டிகளுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இரண்டாம் கட்ட போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட போட்டிகள் பெங்களூரு, மும்பை, சென்னை, கொல்கத்தா, தில்லி, அகமதாபாத், ஹைதராபாத், லக்னௌ, ஜெய்பூர், தர்மசாலா, ராய்பூர், நியூ சண்டிகர் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கின்றன.
முதல் கட்ட போட்டிகளுக்குப் பிறகு இடைவெளி இருக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே இரண்டாம் கட்ட போட்டிகளும் நடைபெறுமென பிசிசிஐ அதிரடியாக அறிவித்துள்ளன.
இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகளில் 8 நாள்கள் 2 அணிகள் மோதும் போட்டிகள் இருக்கின்றன. மதியம் 3.30 மணிக்கும் இரவு 7.30 மணிக்கும் இந்தப் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.
பஞ்சாப் கிங்ஸ் அணி தனது சொந்த திடலாக நியூ சண்டீகர், தர்மசாலாவிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகள் ஜெய்பூரிலும் ஆர்சிபி 3 போட்டிகள் பெங்களூரிலும் 2 போட்டிகள் ராய்பூரிலும் விளையாடுகின்றன. பிளே ஆஃப்ஸ் போட்டிகளுக்கான திடல்கள், தேதிகள் பின்னர் அறிவிக்கப்படுமென பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Summary
BCCI announces schedule for second phase of TATA IPL 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐபிஎல் இறுதிப்போட்டி சின்னசாமி திடலில் கிடையாது! ஏன்?

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐபிஎல் 2026: சிஎஸ்கே விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை!
2026 ஐபிஎல் தொடர் அட்டவணை வெளியானது!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


