காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜாக் எட்வர்ட்ஸுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடர் இன்னும் நான்கு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், அணிகள் அனைத்தும் தீவிரமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. வருகிற மார்ச் 28 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே வீரர்கள் பலரும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி வருகின்றனர். அந்த வரிசையில், பிக் பாஷ் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஜாக் எட்வர்ட்ஸ் சன்ரைசர்ஸ் அணியில் இணைந்தார். ஆனால், அவர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள ஜாக் எட்வர்ட்ஸுக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் அணியில் டேவிட் பைன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து வீரரான டேவிட் பைன் அந்த அணிக்காக ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 233 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 304 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டேவிட் பைன் ரூ. 1.5 கோடிக்கு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
A replacement player has been added to the Sunrisers team to replace Jack Edwards, who was ruled out of the IPL due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஷிவம் மாவிக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாதில் இணைந்த தமிழக வீரர்!

சன்ரைசர்ஸ் அணியில் மாற்று வீரராக இணைந்த தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்!

பிரைடான் கார்ஸுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஆகாஷ் தீப்புக்குப் பதிலாக கேகேஆர் அணியில் இணைந்த மாற்று வீரர்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


