ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் நடப்பு சாம்பியனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணிக்கு அஜிங்க்யா ரஹானே புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், கடந்த சீசன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறப்பான சீசனாக அமையவில்லை. 14 போட்டிகளில் விளையாடி வெறும் 5 போட்டிகளில் மட்டுமே கேகேஆர் வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தது.
இந்த நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒரு வீரராகவும், கேப்டனாகவும் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு வெவ்வேறு விதமான சவால்கள் இருக்கும். ஒரு வீரராகவும், கேப்டனாகவும் என்னுடைய பயணத்தில் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், எந்த மாதிரியான சவால்கள் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் நாம் மிகவும் நேர்மறையாக இருக்க வேண்டும் என்பதே நான் கற்றுக் கொண்டது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடந்த ஆண்டிலிருந்து கேப்டனாக வழிநடத்தி வருகிறேன். கொல்கத்தா அணியை வழிநடத்தும் பொறுப்பை எனக்கு வழங்கியதற்காக அணி நிர்வாகத்துக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். எப்போதும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் இரண்டுமே இருக்கும். நாம் எப்போதும் நமக்கான வாய்ப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும்.
எனக்கான வாய்ப்புகள் என்ன இருக்கிறது என்பது குறித்தே என்னுடைய கிரிக்கெட் பயணம் முழுவதும் சிந்தித்துள்ளேன். எனக்கு முன்னே ஏதேனும் சவால்கள் இருப்பின், அதனை நான் நேர்மறையாகவே அணுகுவேன். அந்த சவாலை ஒரு நல்ல வீரராகவும், கேப்டனாகவும் திறம்பட எதிர்கொண்டு என்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்குவேன். எதிர்வரும் ஐபிஎல் சீசனை நாங்கள் மிகவும் நேர்மறையாக தொடங்க வேண்டும் என்றார்.
வருகிற மார்ச் 29 ஆம் தேதி மும்பை வான்கடே திடலில் நடைபெறும் தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Summary
Kolkata Knight Riders captain Ajinkya Rahane has said that he is ready to face the challenges of captaincy in the IPL series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

19 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?

சிஎஸ்கே பேட்டிங்; 2-வது வெற்றி கிடைக்குமா?

என் மீதான பொறாமையினால் விமர்சிக்கிறார்கள்..! தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் ரஹானே!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


