ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா விலகியுள்ளார்.
இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஹர்ஷித் ராணா, அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த போதிலும், காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார்.
காயத்திலிருந்து மீண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக அவர் விலகுவதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகியுள்ளது கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்ததாவது: கடந்த இரண்டு சீசன்களாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஹர்ஷித் ராணா மிகவும் முக்கியமான வீரராக அங்கம் வகித்துள்ளார். அவர் இல்லாதது கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு மிகப் பெரிய இழப்பு. இந்த ஐபிஎல் தொடரில் ஹர்ஷித் ராணாவை நாங்கள் மிஸ் செய்வோம். அணியில் அவருக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Kolkata Knight Riders fast bowler Harshit Rana has been ruled out of the IPL.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக கேகேஆர் பந்துவீச்சு!

19 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையில் இணைந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?

சிஎஸ்கே பேட்டிங்; 2-வது வெற்றி கிடைக்குமா?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


