ஐபிஎல் தொடரில் இந்த முறை கோப்பையை வெல்வோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த சீசனுக்கு முந்தைய சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆனால், கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார்.
மேலும், அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு, பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை முன்னேறச் செய்தார். இருப்பினும், இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் கோப்பையை இழந்தது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் இந்த முறை கோப்பையை வெல்வோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தும் விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்த இரண்டு மாதங்கள் நாங்கள் ஒரு குடும்பமாக இருப்போம். எங்களுக்குள் எந்த அளவுக்கு அதிக நேரம் செலவிடுகிறோமோ அந்த அளவுக்கு எங்களால் ஒருவரைப் பற்றி மற்றொருவர் நன்றாக தெரிந்துகொள்ள முடியும். அணியில் உள்ள வீரர்கள் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். ஆடுகளத்துக்கு வெளியே வீரர்களுக்கு இடையே சிறப்பான புரிதல் இருந்தால், போட்டியில் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
ஐபிஎல் தொடரில் எதிர்பார்ப்புகள் எப்போதும் அதிகமாக இருக்கும். எனக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும். ஆனால், நாங்கள் களமிறங்கும் போதெல்லாம் வெற்றி பெற வேண்டும் என்பது மிகவும் முக்கியம். என்னுடைய கண்கள் கோப்பையின் மீது உள்ளது. இந்த முறை கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வருகிற மார்ச் 31 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
Summary
Punjab Kings captain Shreyas Iyer is confident that they will win the trophy this time in the IPL series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

மக்களின் கேப்டன் ஸ்ரேயாஷ்..! இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிக் கணக்கைத் தொடங்குமா?

இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வோம்: ஷஷாங் சிங்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


