தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மக்களின் கேப்டன் ஸ்ரேயாஷ்..! இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா?

ஐபிஎல் தொடரில் அசத்தும் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஷ் குறித்து...

News image

அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் ஸ்ரேயாஷ். - படம்: ஏபி

Updated On :17 ஏப்ரல் 2026, 12:21 pm IST

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஷ் ஐயர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நேற்று வான்கடேவில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16.3 ஓவர்களில் 198/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஸ்ரேயாஷ் ஐயர் ஹார்திக் பாண்டியா அடித்த பந்தை எல்லைக் கோட்டில் லாவகமாகப் பிடித்து ஜேவியர் பிராலெட்டிடம் வீசுவார். அவரும் பந்தைப் பிடிக்க, சிறப்பான விக்கெட்டாக அமைந்தது.

கேப்டன்சி என்று வரும்போது பகுதிநேர பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தினார். குறிப்பாக ஷஷாங் சிங்கிற்கு ஓவர் அளிப்பது மிகப்பெரிய பாராட்டைப் பெற்று வருகிறது.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக அவரது இந்த யோசனை நடப்பு ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய முடிவாக இருக்குமென விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் போட்டியிலும் ஷஷாங் சிங் பந்துவீசி விக்கெட் எடுத்தார். பேட்டிங்கில் ஸ்ரேயாஷ் 66 ரன்கள் குவித்து அசத்தினார். இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியே காணாத கேப்டனாக ஸ்ரேயாஷ் இருந்து வருகிறார்.

ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். கொல்கத்தா அணியை கோப்பை வெல்ல வைத்தார்.

தில்லி அணியை வழிநடத்தும்போதும் முன்னேற்றத்தைக் கொடுத்த ஸ்ரேயாஸுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமளிக்கிறது. இந்திய அணிக்கே கேப்டனாகும் வாய்ப்பு இருந்தும் மறுக்கப்படுவது இந்திய ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகிறது.

Summary

Shreyas iyer The People's Captain! Will He Get a Chance in the Indian T20 Squad?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.