மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த சீசனில் விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் விக்கெட் எடுக்காமல் பந்துவீசியுள்ளார். இது மும்பை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விக்கெட் எடுக்காமல் இருந்தாலும் எகானமியாக பந்துவீசினாலும் பரவாயில்லை, ரன்களையும் வாரிவழங்குவதால் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளால் தடுமாறி வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் இருக்கிறது.
நேற்று நடந்த போட்டியில் மும்பை 20 ஓவர்களில் 195/6 ரன்கள் அடிக்க, பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 198/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஓவரை ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து நொறுக்கினார். இந்தப் போட்டியில் பும்ரா தான் வீசிய 4 ஓவர்களில் மொத்தமாக 41 ரன்களை வழங்கினார்.
இந்த ஐபிஎல் சீசனில் பும்ராவின் பந்துவீச்சு விபரங்கள்
முதல் போட்டியில் 4 ஓவர்களில் 35/0, இரண்டாவது போட்டியில் 4 ஓவர்களில் 21/0, மூன்றாவது போட்டியில் 3 ஓவர்களில் 32/0, நான்காவது போட்டியில் 35/0, ஐந்தாவது போட்டியில் 41/0 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்காதது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் பும்ரா முக்கியமான கேட்சை தவறவிட்டதும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த சீசனில் 3 கேட்ச்களை தவறவிட்டுள்ளார். கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கும் இவருக்கும் போட்டியின்போது வாக்குவாதங்கள் நடந்தன.
மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவனில் இருந்து பும்ரா நீக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Summary
Bumrah Goes Wicketless for 5 Matches! Should He Be Dropped from the Playing XI?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரரின் வித்தியாசமான கொண்டாட்டம்..! துண்டுச் சீட்டில் இருந்தது என்ன?

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

பும்ராவுக்கு எதிராக விளையாடும் சூர்யவன்ஷி..! வெல்லப்போவது யார்?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

