மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக முதல் போட்டி; சிஎஸ்கேவுக்கு பலம் சேர்க்கும் சஞ்சு சாம்சன்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

News image

சஞ்சு சாம்சன் - படம்: சிஎஸ்கே (எக்ஸ்)

Updated On :12 மார்ச் 2026, 6:46 pm IST

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் நேற்று (மார்ச் 11) அதிகராபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக மார்ச் 28 முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரையிலான 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் வருகிற மார்ச் 30 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றிருப்பது அந்த அணிக்கு வலிமை சேர்க்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவில் இடம்பெற்றிருப்பது அந்த அணிக்கு மிகவும் சாதகமான விஷயமாக இருக்கும். ஏனெனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் குறித்து சஞ்சு சாம்சனை தவிர்த்து வேறு யாருக்கும் அவ்வளவு நன்றாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பது சஞ்சு சாம்சனுக்கு நன்றாக தெரியும். அந்த அணி எப்படி விளையாடும் என்பதும், பவர்பிளேவில் அவர்களது வியூகங்கள் எப்படி இருக்கும், மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் அவர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பது அனைத்தும் சஞ்சு சாம்சன் நன்கு அறிவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு குறித்தும் சாம்சனுக்கு நன்றாக தெரியும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்கள் அனைவரும் சஞ்சு சாம்சனின் தலைமையின் கீழ் விளையாடியுள்ளனர். அதனால், அவர் சென்னை சூப்பர் கிங்ஸில் இருப்பது அந்த அணிக்கு மிகவும் சாதகமான விஷயமாக அமைந்துள்ளது. அண்மையில் நிறைவடைந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார். மேலும், குவாஹாட்டியில் விளையாடிய அனுபவம் அவருக்கு இருப்பதால் அதுவும் சிஎஸ்கேவுக்கு உதவியாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே எப்படி விளையாடப் போகிறது என்பதைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது என்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 11 சீசன்களில் சஞ்சு சாம்சன் விளையாடியுள்ளார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேடிங் முறையில் ரூ. 18 கோடிக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Chennai Super Kings will play against Rajasthan Royals in their first match of this year's IPL.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.