ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான சஞ்சு சாம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து டிரேடிங் மூலம் சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவில் இணைந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்கள் விளாசி சஞ்சு சாம்சன் அசத்தி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 158 ரன்கள் எடுத்தது. சஞ்சு சாம்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இன்றையப் போட்டியில் 11 ரன்கள் எடுத்ததன் மூலம், ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் எடுத்து சஞ்சு சாம்சன் சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் குவித்துள்ள 10-வது பேட்டர் என்ற பெருமை சஞ்சு சாம்சனையேச் சேரும்.
ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என மூன்று வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதுவரை 180 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 5008 ரன்கள் குவித்துள்ளார். அதில் 5 சதங்கள் மற்றும் 26 அரைசதங்கள் அடங்கும்.
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்த வீரர்கள் வரிசையில் ஏபி டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 304 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Sanju Samson, the opening batsman for the Chennai Super Kings, has set a new record in the IPL series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மைல்கல்கள் சிறப்பானதுதான்; ஆனால்... மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

7 ஆண்டுகளில் முதல் முறை! முதல் போட்டியில் அரை சதம் விளாசத் தவறிய சஞ்சு சாம்சன்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


