சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரர் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு அணியின் மீதும் வெவ்வேறு விதமான எதிர்பார்ப்புகள் இருந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் இணைந்தது ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இருப்பினும், நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன், ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் சரியாக விளையாடாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தார்.
இந்த நிலையில், சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரர் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரில் வேறு ஒரு அணிக்காக (ராஜஸ்தான் ராயல்ஸ்) விளையாடிவிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதற்கு சஞ்சு சாம்சனுக்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 அல்லது 6 மாற்றங்கள் நடந்துள்ளன. அதனால், இப்போதிருப்பது பழைய சிஎஸ்கே அணி கிடையாது. களத்துக்கு வெளியே வீரர்களுக்கு இடையே நிறைய பிணைப்பு தேவைப்படுகிறது.
மூத்த வீரர்களுடன் இணைந்து அணிக்காக ரன்கள் குவிக்க வேண்டுமென்பதில் சஞ்சு சாம்சன் உறுதியாக இருக்கிறார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் எப்படி விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். ரன்கள் குவிக்கத் தொடங்கிவிட்டால், சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரராக இருப்பார். அதனால், அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து நம்பிக்கையை கொடுத்தால் அதுவே போதுமானது என்றார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸில் சஞ்சு சாம்சன் இணைந்த நிலையில், சிஎஸ்கே அணிக்காக முதல் மூன்று போட்டிகளில் 6, 7, 9 ரன்கள் முறையே அவர் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Chennai Super Kings head coach Stephen Fleming has stated that Sanju Samson is a very dangerous player.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

அழுத்தத்தில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட்; சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி கிடைக்குமா?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


