மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்... புதிய சாதனை படைத்த புவனேஷ்வர் குமார்!

ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

News image

புவனேஷ்வர் குமார் - படம் | AP

Updated On :6 ஏப்ரல் 2026, 7:33 pm IST

ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி திடலில் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் சிஸ்கேவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆர்சிபி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், ஜேக்கப் டஃபி, அபிநந்தன் சிங் மற்றும் க்ருணால் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டுகளையும், சூயாஷ் சர்மா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஐபிஎல் வரலாற்றில் முதல் வேகப் பந்துவீச்சாளர்!

சிஎஸ்கேவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப் பந்துவீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமை இவரைச் சேரும். இந்த வரிசையில் 224 விக்கெட்டுகளுடன் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் முதலிடத்தில் உள்ளார். 202 விக்கெட்டுகளுடன் புவனேஷ்வர் குமார் இரண்டாவது இடத்தில் உள்ளார். சுனில் நரைன் (193), பியூஸ் சாவ்லா (192), ரவிச்சந்திரன் அஸ்வின் (187) அடுத்தடுத்து இடங்களில் உள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் 183 விக்கெட்டுகளுடன் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Bhuvneshwar Kumar has set the record for being the first fast bowler to take 200 wickets in the history of the IPL.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.